Monday, August 8, 2011

மீளாத வடுக்களுடன் மீள்குடியேற்றப்பட்ட மக்கள்; நாவலடி மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வியல் ஓர் நேரடி ரிப்போட்


எமது ஊடகப்பயணத்தின் முதல் முயற்சியில் {நேரடி றிப்போட்} நாம் தெளிவுபடுத்த எண்ணியது "போருக்கு பின்னரான அவலங்கள் போரை விட  மிக மோசமானவை" என்பதே . இதை வெளிப்படுத்தும் நோக்கில் சொந்த மண்ணில் இடம்பெயர்ந்து காடுகளிடையேயும், பற்றைகளிடையேயும் தமது கனவுகளை கலைத்துக்கொண்டு வாழ்ந்த இவர்கள் மீள் குடியேற்றம் என்ற பெயரில் படும் இன்னல்களை வெளியுலகத்திற்கு வெளிப்படுத்துவதையே நோக்கமாக கொண்டிருந்தது.


 இந்த வகையில் யாழில் உள்ள அரியாலை கிழக்குப் பகுதியில் உள்ள நாவலடி பூம்புகார் மற்றும் கிழக் அரியாலை எனப்படும் மூண்று மீள்குடியேற்றக் கிராமங்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளன இவற்றுள்   J/ 90 ஐ  கிராம சேவையாளர் பிரிவாகக் கொண்ட மக்களை பல்வேறு சிரமங்களின் மத்தியில் செவ்வி கான சந்தர்பம் கிடைத்தபோது. 

முதலில் நாம் அக் கிராமத்தின் வாயிலில் உள்ள ஓர் சிறிய கடையில் விசாரித்தோம் அவரின் உதவியுடன் அக் கிராமத்திற்குள் நுழைந்தோம் தகரத்தினால் வேயப்பட்ட  சிறிய சிறிய குடில்கள் மிகவும்  நெருக்கமாகவும். மழை ஓய்ந்தும் அங்காங்கே தேங்கி நிற்கும் வெள்ளங்கள். ஆரம்பம் எது முடிவு எது என குழம்பும் அளவிற்கு பாதைகள் என பார்தவுடனே மனதை வருடும் காட்சிகள் தொடர்ந்தன
தொடர்ந்து பல குடிசைகளை தான்டி இக்கிராமத்தின்  தலைவியாக செயற்படுகின்ற சன்முகதாஸ் விக்னேஸ்வரியையே முதலில் சந்தித்தோம். அக்கிராமத்தைப் பற்றிய அனைத்து விடயங்களும் அவருக்கு அதிகமாகவே தெரிந்திருந்தது நாம் கேட்டதை விட மேலதிகமாகவே தகவல்களை பெற்றுக் கொன்டோம 1995ம் ஆண்டு ஏற்பட்ட இடப்பெயர்வின் பின் சென்றவருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இக் கிராமத்தில் 130 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டன என்றும் ஆரம்பத்தில் பெரும்பாலான வீடுகளை இரானுவத்தினரே கட்டித்தந்தார்கள் என குறிப்பிட்டார்.  

  இம்மக்களுக்கு அரசாங்கம் மற்றும் அரசசார்பற்ற நிறுவனமான கரித்தாஸ் கீயூடேக் பல உதவிகளை வழங்கிய போதும் தமது அடிப்படைத் தேவைகள் ஒரு வருடமாகியும் நிறைவு செய்யப்படவில்லை எனவும் ஆரம்பத்தில் குடிநீர் வசதி மிகப்பெரும் பிரச்சனையாக இருந்ததாகவும் தற்பொழுது கரிதாஸ் கீயூடேக் நிறுவனம் பாலடைந்த கிணறுகளை புணர்நிர்மானம் செய்ததனால் தற்போது பிரச்சனைகள் இல்லை எனவும் தெரிவித்தார்.




இருப்பினும் மலசலகூட வசதி இன்மையினாலும் மின்சார வசதிகள் இன்மையாலும் பல இன்னல்களை எதிர்நோக்குவதாகவும் கூறினார். மணியம்தோடடத்தில் உள்ள மீள்குடியேற்ற கிராமங்களுக்கு மின்சாரம் வந்துவிட்டது எனவும் பலமுறை மனு கொடுத்தும் இதுவரையும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை வருகின்ற மாதம் இதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என சிறுகைத்தொழில் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா கூறியதாக தெரிவித்தார்
இங்கு கடைகள் இருக்கின்றன இருப்பினும் அத்திய அவசிய பொருட்கள் வாங்குவதாயின் பல கிலோமீற்றர் தூரம் செல்ல வேன்டியுள்ளது என்றார்
தொடந்து மூதாட்டியான கந்தையா ரத்தினம் அவர்களை சந்தித்தோம்

தனது சிறிய குடில் வாயிலில் கால்களை நீட்டியவாறு சுழகில் அரிசியை பரப்பி விட்டு ஏதோ முனு முனுத்த படி உட்காந்திருந்தார் எமது கேள்விகளுக்கு எந்தவித சலிப்பும் இன்றி பதில் சென்னார் தனக்கு ஏழு பிள்ளைகள் இருப்பினும் தான் தற்போது இக் குடிசையில் தனியே வசிப்பதாகவும் சொன்னார். சொல்லும் போதே கண்னிருடன் தனது சேலை தலைப்பினால் கண்களை துடைத்தவாறு சுதாகரித்துக் கொன்டார். மாதாந்த உதவிப்பணம் நூறு ருபாய் வருவதாகவும் நிவாரனம் தனக்கு போதியதாக உள்ளது எனவும் மலசலகூடம் இல்லாததால் அயல் வீடுகளுக்கு வயதுபோன காலங்களில் செல்ல வேண்டியுள்ளதாகவும் மற்றும் மின்சாரம் இல்லாததால் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குவதாகவும்; சொன்னார். ஏதோ முணுமுணுத்தவாறு குடிலுக்குள் சென்றார்.

அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்பும் போது”யார் பிள்ளைகள் நீங்கள்” எனறு விசாரித்தவாரே நெருங்கினார் திருமதி.தம்பிராசா அவரிடம் இருந்தும் பல தகவல்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது அரசாஙகம் வாழ்வாதார கடன் மற்றும் சிறு கைத்தைழிலுக்காக கோழி மற்றும் ஆடு மாடு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்
இதனால் தமது வருமானங்களை உயர்தி கொள்ளக் கூடியதாக இருக்கின்றது என்றார் மீள் குடியேற்றப்பட்ட போது அரசாங்கத்தினால் எட்டு பக்கற் சீமெந்தும் ஐயாயிரம் ருபாய் காசும் தந்ததாகவும் பத்து குடும்பங்களுக்கு தகரம் வழங்கபட்டதாகவும் விதை நெல் விவசாய பயிற்சி நிலையதினால் வழங்கபட்டதாகவும் சொன்னார்.  

இதனையும் சொல்லியே ஆகவேண்டும் இன்னுமொரு வீட்டின் வாயிலில் சுமார் ழூன்று வயது மதிக்கத்தக்க பெண்பிள்ளை இரண்டு உடைந்த விளையாட்டு காரை வைத்து உருட்டியபடி இருந்தது. நாம் அழைத்தபோது வெளியே வந்த யுத்ததினால் தனது கனவனை இழந்த அக் குழந்தையின் தாய் வீரசிங்கம் கொளரி “வாங்கோ எங்க இருந்து வாரிகள் என்ற கேள்வியுடனே தனது தலையை சரிசெய்து கொன்டு வந்தார் நாம் பதில் சொன்ன மறுகனமே இங்க உங்கள மாரித்தான் எத்தினபேர் வந்திட்டினம் ஒரு பிரியோசனமும் இல்ல ஏதோ அத செய்யிறம் இத செய்யிறம் என்டுட்டு மாதத்தில நாலஞ்சு பேராவது வந்திடுவினம். என தொடர்ந்தது அவரின் பேச்சு. நாம் என்ன செய்ய? வெறும் மௌனம் மட்டுமே அது தான் பொருத்தம் அந்த நேரத்தில்.
வலிகளின் இழைகளுக்குள் இறுக்ப்பட்ட உணர்வுகளை வெளிக்கொணர்ந்து விட்டேனோ என தோன்றியது இவ் உறவுகளுக்காக என்ன செய்திருக்கிறோம் எதையும் சிந்திக்க முடிவதும் இல்லை.. சிந்தித்தாலும் செயற்படுத்த முடிவதில்லை. அவரைப்பற்றிய வேறு எந்தத் தகவலும் அறியமுடியவில்லை எனினும் நாம் அந்த வீட்டு வாயிலை விட்டு நகரும் வரையும் அக் குழந்தை க்கு விளையாட்டில் தான் முக்கவனமு கவனமும் இருந்தது. .நம்முடைய பயனத்தில் இவ்வாறான சுவாரசியமான நிகழ்வும் நடந்தது.
காலமும் வாழ்வும் இருவேறு திசைகளில் பயணிக்கையில் பிரிவு என்பது நிச்சயிக்கப்பட்டவையே
அத் தாயின் மனநிலையின் வெளிப்பாடே அது.

மேலும் சுதாகரன் விமலா தெரிவிக்கையில் பாடசாலை நேரங்களில் பேருந்து வருவதாகவும் அதுவும் சில நாட்களில் தாமதமாகவும்  சில வேலைகளில் வருவதே இல்லை என்றும் குறிப்பிட்டர்; .அனைவருக்கும் மின்சாரம் இல்லாதது பெரும் பிரச்சனையாகவே காணப்படுகின்றது
அதன் பின்  கிராம வாயிலில் உள்ள  பெட்டிக்கடைக்குள் சென்ற போது உரிமையாளர் கொளரிதாஸ்   இரானுவத்தினருடன் உரையாடிக் கொன்டிருந்தார். சிறிது நேரத்தில்  அவர்கள் வெளியோறியவுடன் உள்நுழைந்தோம.; தகரத்தினால் வேயப்பட்டிருந்தது. யாழ்பாணத்தை விட்டு விசுவமடுவிற்கு 1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து சென்றார் எனவும் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புதுமாத்தளனில்  ஏற்பட்ட செல்வீச்சில் இடுப்புப் பகுதியிலும் முதுகுப்பகுதியிலும் கடுமையான காயம் ஏற்பட்டது என கூறும் போதே அதன் வலியை தனது முகபாவனையூடாக வெளிக் கொனர்ந்தார். 
தற்போதும் செல் பாகங்கள் உடம்பிற்குள் இருப்பதாகவும் பாரிய வேலைகளை செய்யமுடிவதில்லை எனவும்; இக்கடையினால் மாதவருமானம் வெறுமென 3000 ரூபாய் மட்டுமே. இதை வைத்து என் குடும்பத்தை கொண்;டு நடத்த சிரமமாக உள்ளது எனவும் தெரிவித்தார். தினமும் திருநெல்வேலி சந்தையில் மரக்கறி மற்றும் ஏனைய பொருட்களை எடுத்து வருவதாகவும் முன்பைவிட தற்போது அதிக அளவு மக்களின் நடமாட்டம் இருப்பதால் வியாபாரம் ஓரளவு பரவாயில்லை என்றும் குறிப்பிட்டார்
மேலும் அவர் தெரிவிக்கையில் இராணுவத்தினரால் அமைத்துத் தரப்பட்ட வீடுகள் ‘லைலா’ புயலின் தாக்கத்தின் பின் முற்றாக அழிவடைந்ததாகவும் அதன் பின் அனைவரும் தாமாகவே வீடுகளை அமைத்துக் கொண்டனர் எனவும் கூறினார்.

மேலும் நாம் அக்கிராமத்தை பார்வையிட்ட போது இலங்கை இரானுவத்தினரின் அன்பளிப்பு என்ற பலகை தொங்கவிடப்பட்டவாறு ஓரு வீடு மட்டுமே காணப்பட்டது. இராணுவத்தினரால் அமைத்துக் கொடுக்கப்பட்ட மற்றய வீடுகளின் தடையங்களே காணப்படவில்லை.
நாம் அக்கிராமத்திற்கு சென்ற போது ஏற்படாத மனநிலை வெளியேறும் போது ஏதோ ஒன்று மனதை கசக்கிப் பிளிந்து கொண்டிருந்தது.
சொந்த மண்ணில் இடம் பெயர்ந்து காடுகளிடையேயும் பற்றை களிடையேயும் மீள்குடியேற்றப்பட்ட பெயரில் அவர்கள் படும் இன்னல்கள் எப்போதுதான்  வெளியுளகிற்க்கு  தெரியப்      போகின்றனவோ?   வார்தைகள்  தான்டிய பேரவலத்தில்  இருப்பவர்களைப்பற்றி எத்தனை வரிகளாளும் தாள்களில் நிரப்பிவிடலாம்.!

இவற்றை வைத்துப் பார்கும் போது போருக்கு பின்னரான அழிவுகள் போரை விட மிக மோசமானவை என்று தான் சொல்ல வேண்டும். மின்சார வசதியின்மை மற்றும் கழிப்பிட வசதியின்மை என்பன பெரும் சவால்களாகியுள்ளன. இவை தவிர இங்குள்ள பெரும்பாலன மக்கள் கோரமான உளவியல் தாக்கங்களின் சாட்சியங்களாக உள்ளனா.; தடுப்பு முகாம் வாழ்கை பெரும் சுமையாக இருந்துள்ளமை  தெட்டத் தெளிவாக தெரிகின்றது மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கான    உதவித்  திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்ட பொழுதும் அவர்களின் வாழ்வில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை என்றே தான் கூறவேன்டும்.  
      
  

வடக்கில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அசாதாரன சூழ்நிலையினால் மக்கள்தம் இயல்பு வாழ்வுக்கு திரும்ப முடியாமல் தற்பொழுதும் நலன்புரி நிலையங்களிலும் தடுப்பு முகாம்களிலும் தமது கனவுகளை கலைத்துக்கொன்டு வாழ்கின்றனர் இவர்களில் ஒரு பகுதியினர் ஏக்கத்துடன் பல்வேறு சவால்களுக்குமத்தியில் தமது சொந்த இடங்களுக்கு மீள் குடியேறியுள்ளனர்.


எம் கடிவாளம் பத்திரிக்கையில் எமது நாவலடி கிராம நேரடி றிப்போட்

எம் கடிவாளம் பத்திரிக்கையில்

எம்மை இவ்வாறான புதிய பாதையில் பயணிப்பதற்கு வழிநடத்திய எமது பயிற்றுணரிற்கு எமது மனப்பூர்வமான நன்றிகள்...


No comments:

Post a Comment